About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Tuesday 26 March 2013

Wife's expectation from Husband - Successful life tips


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.

Wonderful health benefits of Coriandrum (Kotha malli)


தெரிந்துக்கொள்வோம் - கொத்தமல்லி
----------------------------------------------------

தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)

கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

Wonderful Health Benefits of Pepper (Milagu)


மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்...

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.


FILEபற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

Saturday 16 March 2013

5 mins Meditation during work will reduce work stress


இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணினியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணினி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான சில வழிமுறைகளைக் காண்போமா!!! * கணினிக்கு முன் அமர்ந்து கொண்டு ஆழமான, சுத்தமான சுவாசத்தை இழுத்து, மெதுவாக வெளியே விடவும். வேலை செய்யும் போது இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். * கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சுவாசம் தாறுமாறாக இருப்பதாக உணர்ந்தால், உடனே வேலை செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விடவும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக மூக்கு வழியே இழுக்கவும். முதலில் நுரையீரலில் காற்றை நிரப்பிய பின், கீழே கொண்டு செல்லவும். பின் மேல் நெஞ்சுக் கூடு விரிவதையும், பின்பு நெஞ்சுக் கூட்டின் கீழ் பகுதி விரிவதையும் உணர வேண்டும். பின்பு மெதுவாக உதட்டின் வழியே சுவாசத்தை வெளியே விட வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் செய்த பின் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தியானத்தால் செய்யப்படும் இந்த மூச்சுப் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யப்படும் ஒரு எளிய பயிற்சியாகும். * கணினி முன் அமர்ந்து கொண்டு இவ்வகை தியான முறைகளை எளிதாக செய்யலாம். இதற்கு மூளை பலத்தை உபயோகிக்க வேண்டும். மனத்தால் செய்யும் தியானத்தில், நீங்கள் செய்யும் வேலையையே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்று இந்த வேலையை முடித்துவிடுவேன் என்று அடிக்கடி மனதில் உறுதியோடு கூறிக் கொள்ள வேண்டும். இப்படி அடிக்கடி நினைக்கும் போது, மற்ற தேவையில்லாத சிந்தனைகள் மனதை விட்டு நீங்கிவிடும். மனம் வெற்றிடமாகிவிடும். அதில் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது. மேலும் தொடங்கிய வேலைகளை எளிதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடலாம். * அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் சேர்த்துக் கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி, நாங்கள் இந்த வேலையை செய்து முடிப்போம் என்று மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ கூற வேண்டும். இவ்வாறு கூறும் போது அங்கு ஒரு அசாத்திய அமைதி நிலவும். இதனால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனம் ஓரளவு அமைதி அடையும். * கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் போது, மன அழுத்தம் அதிகரித்தால் சில வார்த்தைகளை மனதிற்குள் சொல்ல, மனம் அமைதி பெரும். உதாரணத்திற்கு, வேலைக்கிடையே 'ஓம் சாந்தி, ஓம் சாந்தி' என்ற வார்த்தைகளை சிறிது நேரம் கூறலாம். பிடித்த கடவுள் அல்லது பிடித்த மகான்களின் படங்களை வேலை செய்யும் அறையில் வைத்துக் கொண்டோ அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டோ 'எனக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டும். அதற்கு உங்களது வழிகாட்டுதல் தேவை' என்று மனமுருக பிரார்த்தனை செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைந்து, சில நிமிடங்களில் மனம் அமைதியடைந்து விடும். * 5 நிமிட தியானத்தை, 10 நிமிடமாக மாற்றலாம். இந்த தாமதம் மன அமைதியை மேலும் அதிகரிக்கும். இதனால் இறுதி கட்டத்தில் சொல்ல முடியாத இன்பத்தை அனுபவிக்கலாம். மேலும் மனம் மகிழ்ச்சி அடைவதை நன்கு உணரலாம்.

Methi keerai helps to reduce diabetis & Cholestrol

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!


நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தாது உப்புக்கள் வைட்டமின்கள் வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது. நூறுகிராம் வெந்தையக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. அதோடு வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள். வெந்தையக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும். இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தையக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும். வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தையக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும். தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தையக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம் தாய்ப்பால் ஊறும். வெந்தையக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால் இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப்புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1 டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.