விருந்தினர்கள் கடவுள் போன்றவர்கள் என்ற முதுமொழி இந்தியர்களின் விருந்தோம்பலைப் பறைசாற்றும். சுற்றுலா என்பதும் ஒருவகை விருந்தோம்பலே.
இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆயத்த ஆடைகள், ஆபரணக் கற்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் பிடித்திருப்பது சுற்றுலாத்துறை என்பதில் பலருக்கும் ஆச்சரியம் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. சுற்றுலாத்துறை என்பது தனித்துறை அல்ல; பல துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கொண்டது.
ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி இந்தியாவில் ஒரு வேலைவாய்ப்பையும்; 17 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்குகின்றனர் என்பதில் இருந்தே இத்துறையின் வேலைவாய்ப்பை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
சுற்றுலாத்துறையில் பணிபுரியும் ஒருவர், தான் மட்டுமின்றி இதர துறைகளைச் சேர்ந்த 1.36 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு என்பது டூரிஸ்ட் கைடு மட்டும் அல்ல. குடியேற்றம், சுங்கம், பயண முகவர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், தங்கும் விடுதிகள், என பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது; ஏராளமான பணி வாய்ப்புகளை உள்ளடக்கியது.
இத்துறையில் தேர்ந்த பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
சூழலியல் சுற்றுலா(எகோ டூரிசம்), மருத்துவச் சுற்றுலா, ஓய்வு நேர சுற்றுலா, புராதன, கலாச்சார சுற்றுலா. ஆன்மிக சுற்றுலா, கல்விச் சுற்றுலா எனப் பலவகை சுற்றுலாக்கள் உள்ளன.
அடுத்த பத்தாண்டுகளில் இந்திய சுற்றுலா இரண்டு மடங்கு வளர்ச்சி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது அத்துறைக்கு திறமையான நபர்கள் தேவைப்படுவர். சுற்றுலாத்துறையால், உள்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள், உள்ளூர்வாசிகளுக்கான அடிப்படைத் தேவைகள் உயரும். அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் கணிசமான பங்கு சுற்றுலாத்துறைக்கு உள்ளது. எனவே, இத்துறையின் வளர்ச்சியில் அரசும் அக்கறை கொண்டுள்ளது.
பயண ஏற்பாட்டாளராக இருப்பவர் தனது துறைசார்ந்த பல்வேறு விஷயங்களையும், சமீபத்திய நடப்புகளையும் தெரிந்து கொண்டவராக இருப்பது அவசியம். விசா, பாஸ்போர்ட் நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் போன்றவற்றிலும் இதுதொடர்பாக கடைசியாக செய்யப்பட்ட மாறுதல்களையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
பயணம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக ஏராளமான சான்றிதழ், பட்டயப்படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இளநிலைப் பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புக்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு அவசியம். சில கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்கின்றன.
நன்கு பழகும் தன்மையும், சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இத்துறை மிகச்சிறந்த தேர்வு. பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தன்மையும், ஆங்கிலத்தில் பேசும் திறனும் அவசியம். வெளிநாட்டு மொழி ஒன்றைத் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் தகுதி.
இத்துறையில் படிப்பை முடித்தவர்கள், விமானங்களில் டிராபிக் அசிஸ்டன்ஸ், பதிவு செய்தல், கவுன்டர் பணி, விமானப் பணிப்பெண், விமான பயணிகள் நல அலுவலர், விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு, வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணிபுரியலாம்.
சரக்கு கையாள்தல் பிரிவு, சுற்றுலா மைய அலுவலகங்கள், பயண ஏற்பாட்டாளர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. படிப்பை முடித்த உடன் 8,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையும்; இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரையும் ஊதியம் பெறலாம். 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
மத்திய, மாநில அரசுப்பணி பெறுவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இத்துறை சார்ந்த அடிப்படை மற்றும் சான்றிதழ் படிப்புகள்:
1) Airlines Management course
2) Basic course in Air and Sea Cargo
3) Service Management Basic Course in Airline Travel, Fares & Ticketing Management
4) Basic Course in Computer Application & Software Studies Basic course in Computerized Reservation System
5) Basic course on Airlines Travel Agency & Tour Operation Management
6) Certificate course in Airlines Ticketing &Tour Planning
7) Course in Domestic, International Ticketing & Airlines with Computer
8) Course in Airlines, Tourism, Tours & Travel Management with Marketing & Ticketing Foundation & Consultant course in International Tourism Language course
9) Certificate course in Tourist Guide
Diploma Courses:
1) Diploma Course in Multimodal Transport & Logistics Management
2) Diploma Course in Rail Transport & Management Diploma course in Transport Economics & Management
3) Diploma in Tourism & Destination Management
4) Diploma in Hotel & Tourism Management
5) Diploma in Tourism & Travel Management
6) Diploma in Tourism Management
7) Diploma in Travel & Tourism Indusry Management
Bachelor Courses:
1) Bachelor in Tourism Administration
2) Bachelor of Hotel& Tourism Management
3) Bachelors degree on Tourism and Hospitality Management
4) Graduate Integrated course in Tourism
5) Vocational Program in Tourisim & Travel Manangement
PG Diploma Courses:
1) PG Diploma in Airlines
2) PG Diploma in Business Administration (Tourism)
3) PG Diploma in Cargo Operation & Management
4) PG Diploma in Destination Management
5) PG Diploma in Guiding & Destination management
6) PG Diploma in Travel & Tourism Management
7) PG Diploma in Tourism & Hotelierng Management
8) PG Diploma in Tourism & Hotel Management
9) PG Diploma in Tourism Management
10) PG Diploma in Travel Management
Master/PG Corses:
1) Master Of Tourism Administration
2) Master Of Tourism Management
3) Master Of Travel & Tourism Management
இவை தவிர இன்னும் ஏராளமான படிப்புகள் இத்துறை சார்ந்து உள்ளன. இப்படிப்புகளை நாடுமுழுதும் ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் சில...
KUONI Academy, Chennai;
Monarch International college of Hotel Management, Pudumund, Ooty
Mother Terasa Women's University, Kodaikanal
Madurai Kamaraj University, Madurai
University Of Madras, Chennai
Annamalai University, Annamalai Nagar
G.R.Damodharan Academy Of Management, Coimbatore
Institute For Social Sciences and Research, Vellore
தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள்
Alagappa University, Karaikudi
Annamalai University, Annamalai Nagar
Bharathiar University, Coimbatore
Bharathidasan University, Tiruchirappalli
Madurai Kamaraj University, Madurai
Periyar University, Salem
About Me
- Saravanakumar Kandasamy
- I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits & Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )
No comments:
Post a Comment