இது மத்திய அரசால் 1926ல் கோல்கட்டாவில் துவங்கப்பட்டது. 1967ம் ஆண்டு யு.சி.ஜி., சட்டப்படி இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. 1996 - 97ம் கல்வி ஆண்டில் இது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கோல்கட்டாவிலிருந்து 260 கி.மீ., தொலைவில், நாட்டின் முதன்மை நிலக்கரிப் பகுதியான ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் அமைந்துள்ளது. 88 ஹெக்டேர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலை தனது முன்னாள் மாணவர்களின் மூலம் உலகில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதிகள் உள்ளன.
மாணவர்கள் இப்பல்கலையில் சேர்ந்து படிப்பதற்கு, இந்தியா முழுவதும் பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறவேண்டும். மேலும் 1997ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
பல்கலையில் உள்ள பெட்ரோலியம் இன்ஜினியரிங், மினரல் இன்ஜினியரிங் மற்றும் சுரங்க இயந்திர இன்ஜினியரிங் ஆகிய மூன்று படிப்புகளும் இந்தியாவிலுள்ள எந்த ஐ.ஐ.டி., களிலும் கிடையாது.
பல்கலை வழங்கும் படிப்புகள்
பி.டெக் (4 வருடம்)
* சுரங்க இன்ஜினியரிங்
* பெட்ரோலியம் இன்ஜினியரிங்
* சுரங்க இயந்திர இன்ஜினியரிங்
* கனிம இன்ஜினியரிங்
* கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
* எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன்
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
* எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
* சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
பி.டெக் (5 வருடம் இரட்டைப்படிப்பு)
* சுரங்க இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ.,
* சுரங்க இன்ஜினியரிங் மற்றும் எம்.டெக்.,
சுரங்க இன்ஜினியரிங்
* பெட்ரோலியம் இன்ஜினியரிங் மற்றும் எம்.டெக்., பெட்ரோலியம் நிர்வாகம்
* கனிம இன்ஜினியரிங் மற்றும் எம்.டெக்.,
கனிம வளங்கள் நிர்வாகம்
* கனிம இன்ஜினியரிங் மற்றும் எம்.டெக்.,
மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி
எம்.எஸ்சி., ( 5 ஐந்து வருட ஒருங்கிணைந்த படிப்பு)
* அப்ளைடு இயற்பியல்
* வேதியியல்
* கணிதம் மற்றும் கணினியில்
எம்.எஸ்சி., டெக்னாலஜி ( 5 ஐந்து வருடஒருங்கிணைந்த படிப்பு)
* அப்ளைடு நிலவியல்
* அப்ளைடு புவி இயற்பியல்
எம்.எஸ்சி., ( 2 வருடம்)
* அப்ளைடு இயற்பியல்
* வேதியியல்
* கணிதம் மற்றும் கணினியில்
நிர்வாகம் ( 2 வருடம்)
* எம்.பி.ஏ., எம்.பில்.,
* அப்ளைடு இயற்பியல்
* அப்ளைடு வேதியியல்
* அப்ளைடு கணிதம்
* ஆங்கிலம்
எம்.டெக்.,
மொத்தம் 23 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சில படிப்புகள்
* எரிபொருள் இன்ஜினியரிங்
* கனிம இன்ஜினியரிங்
* உயிர் கனிம இன்ஜினியரிங்
* பெட்ரோலியம் இன்ஜினியரிங்
* கம்ப்யூட்டர் அப்ளிகேசன்
* நிலவியல் இன்ஜினியரிங்
வேலை வாய்ப்புகள்
பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வளாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது படிப்பை முடிக்கும் போதே வேலை வாய்ப்பினையும் பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வளாகத்தேர்வில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்:
2009ல் 448 பேரில் 277 மாணவர்களும், 2008ல் 442 பேரில் 352 மாணவர்களும், 2007ல் 342 பேரில் 308 மாணவர்களும், 2006ல் 335 பேரில் 257 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக இணையதள முகவரி:
No comments:
Post a Comment