மருத்துவத் தொழிலை எடுத்துக்கொண்டால்
உயர் படிப்புகள்நீங்கள் விரும்பினால், நர்சிங் படிப்பில் 2 வருட எம்.எஸ்சி படிக்கலாம். சிலர் இதிலேயே எம்.பில் முடித்து பி.எச்டி வரை செல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மிக அரிதான நபர்களே இந்த நிலை வரை செல்கிறார்கள். முதுநிலை அடிப்படை சிறப்பு டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்வதே இங்கு பரவலான நிகழ்வாக இருக்கிறது.
நர்சிங் பணிக்கு தேவையான பண்புகள்பொறுமையும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் இப்பணிக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகள். எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பரிவு மற்றும் பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவை தேவை. இப்பணியில் பலமணி நேரங்கள் நின்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ற உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து நோயாளிகளையும் பாரபட்சமின்றி கவனிக்கும் மனப்பாங்கு வேண்டும்.
ஒரு நர்ஸ் என்ற முறையில் உங்களின் பணியும், பொறுப்பும் பரந்த நிலையைக் கொண்டவை. மருந்துகளை தவறாமல் நோயாளிகளுக்கு கொடுப்பது, ஒவ்வொரு நோயாளியைப் பற்றிய பதிவுகளை(ரெக்கார்ட்) பராமரிப்பது, நோயாளியின் மேம்பாட்டைக் கண்காணிப்பது, மருத்துவ உபகரணங்களை அமைப்பது மற்றும் இயக்குவது ஆகியவற்றுடன் வழக்கமான பணிகளையும் சிறப்பான மேற்கொள்ள வேண்டும். இத்தொழிலில் உங்களுக்கு அனுபவம் கிடைத்தவுடன், மனநல பிரிவு, குழந்தை நலப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் செயல்படும் பணியாளர்களை மேற்பார்வையிட வேண்டியிருக்கும்.
வேலை வாய்ப்புகள்மனித வாழ்க்கையில் மருத்துவம் என்பது ஒரு தவிர்க்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த அம்சம் என்பதால், மருத்துவ சேவையின் அனைத்து நிலைகளிலும் செவிலியர்களுக்கான தேவை என்றென்றைக்கும் இருக்கும். மருத்துவமனைகள், நர்சிங் மையங்கள், கிளீனிக்குகள், சுகாதாரத் துறைகள், வயதானவர்களுக்கான ஆதரவு மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிகள், ரயில்வே நிறுவனங்கள், பொதுத்துறைகளின் மருத்துவப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் ராணுவம் போன்ற ஏராளமான பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
பப்ளிக் ஹெல்த் நர்சிங் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் நர்சிங் போன்றவை மற்ற வாய்ப்புகள். குறிப்பிட்ட மக்களுக்கு சேவையளிக்க, நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். தூதரகங்கள், புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் தகுதியுள்ள செவிலியர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன.
சம்பளம்இளம் வயது செவிலியர்களுக்கு, வெளிநாடு சென்று பணி செய்வது ஒரு விருப்பமான சேவையாக உள்ளது. நீங்கள் படித்தப் படிப்பின் தன்மை, எந்தப் பிரிவில் உங்களின் நிபுணத்துவம் உள்ளது, வேலை செய்யும் இடம் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களின் சம்பளம் மாறுபடும். ஒரு தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேரும் செவிலியர், ஆரம்பத்தில் மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பளமாகப் பெறுவார்.
வெளிநாடுகளில் பொதுவான நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கே சம்பளம் தவிர, மருத்துவக் காப்பீடு, விடுமுறைகால சம்பளம், பென்ஷன் திட்டங்கள், வருடாந்திர விடுமுறை மற்றும் இன்னபிற வகையான நன்மைகளும் கிடைக்கும். அமெரிக்காவில், செவிலியர்கள், ஊக்கத்தொகையாக 2000 முதல் 10,000 டாலர்கள் வரைப் பெறுகிறார்கள். மேலும் அந்நாட்டில், பதிவுசெய்து ஒரு வருடம் முடிந்த செவிலியர்கள், ஒரு மணி நேரத்திற்கு 17 டாலர்களை சாதாரண பணிநேரத்தில் பெறுகிறார்கள். அதேசமயத்தில், மாலை நேரமாக இருந்தால் 19 டாலர்களும், இரவு நேரமாக இருந்தால் 20 டாலர்களும் பெறுகிறார்கள்.
வெளிநாட்டுப் பணிக்கு செல்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக, விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்கால வாய்ப்புகள்தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி(என்.எஸ்.டி.சி), அடுத்தப் பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 90 லட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது. தகுதியான செவிலியர்களுக்கு இருக்கும் தேவையானது, மருத்துவர்களுக்கு இருக்கும் தேவையைவிட அதிகமாக உள்ளது. நோயுற்றவர்களுக்கு அன்பு காட்டி அவர்களுக்கு உங்களால் பணிவிடை செய்யும் திறன் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால் நீங்கள் தாராளமாக இந்தத் தொழிலை தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment