About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday, 20 January 2012

Info about Geology Studies

‘ஜியாலஜி’ எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது.
பூமியின் கட்டமைப்பு, இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், வரலாறு, உருவான வழிமுறைகள் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றில் ஆய்வு மேற்கொள்ளும் துறை ‘நிலவியல்’ எனப்படும். இது புவியை <உருவாக்கிய திட மற்றும் திரவப்பொருட்களை படிக்கும் அறிவியல் துறையாகும். இத்துறையின் அறிவினைக் கொண்டு புவியில் இருக்கும் நிலக்கரி, இரும்பு, செம்பு, யுரேனியம், உள்ளிட்ட இயற்கை வளங்கள் அடையாளம் காணப்படுகிறது. நிலவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் ஆராயப்படுகின்றன. இதன் பெயர் ‘விண்நிலவியல்’ (அஸ்ட்டிராலஜி)
வரலாறு
‘தியோபிரேஸ்டஸ்’ என்பவர் எழுதிய பெரிலித்தோன் என்ற புத்தகமே பாறைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான நூலாக இருந்தது. இவர் அரிஸ்டாட்டிலின் சிஷ்யனாவார். 1788 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹூட்டன் என்பவர் பூமியின் கோட்பாடுகள் பற்றிய கட்டுரை வெளியிட்டார். இவர் முதல் ‘நவீன நிலவியலாளர்’ என்று அழைக்கப்பட்டார். 1769 - 1839க்கு இடைப்பட்ட காலங்களில் வில்லியம் ஸ்மித் என்பவர் புவியின் அமைப்பு, பாறைப்படிவங்கள் ஆகியவற்றின் வரைபடங்களை வரைந்ததுடன் அவற்றில் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
நிலவியல் துறையானது 19ம் நூற்றாண்டில் பெரும் மாற்றங்கள் கண்டது. புவியின் வயதை பற்றிய ஆய்வுகள் இந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டன. 20ஆம் நூற்றாண்டில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1960களில் புவித் தட்டின் கட்டமைப்பு ( பிளேட் டெக்டானிக்ஸ்) என்ற கோட்பாடு உருவானது முக்கிய நிகழ்வாகும். இதன் பின் இத்துறை பெரும் வளர்ச்சி பெற்றது.
நிலவியலின் வழிமுறைகள்
புவியை ஆய்வு செய்வதற்கும், அவற்றின் வரலாறை அறிவதற்கும் நிலவியல் வல்லுனர்கள் களப்பணி , ஆய்வகப்பணி போன்ற வழிமுறைகளை கையாளுகின்றனர். இவ்விரு வழிமுறைகளும் பல துறைகளை உள்ளடக்கியது.
களப்பணி
களப்பணி கீழ்கண்ட துறைகளை உள்ளடக்கியது.
*  நிலவியல் தொடர்பான வரைபடம் வரைதல்
* டோபோகிராபி எனப்படும் இடக்கிடப்பியல் சிறப்புகளை அறிதல்
* புவிஇயற்பியல் ஆராய்தல்
* நில அடுக்குகளை ஆராயும் ஸ்டிராடிகிராபி
* நிலவியல் சார்ந்த உயிர்வேதியல் மற்றும் நுண்ணுயிரியல்
* பழம்பொருட்களை கண்டறியும் மற்றும் ஆய்வு செய்யும் ‘பேல்ஆன்டாலஜி’
* புவியின் காலத்தை கணக்கிடும் ‘ஜியோ குரோனாலஜி’ மற்றும் ‘தெர்மோ குரோனாலஜி’
* பனிப்பாறைகளின் தன்மைகளையும் அதன் இயக்கத்தையும் கணக்கிடும் ‘கிளாசியாலஜி’
ஆய்வகப்பணி
ஆய்வகப்பணி கீழ்கண்ட துறைகளை உள்ளடக்கியது.
* பாறைகள் ஆய்வு (பெட்ராலஜி)
* கோள்கள் நிலவியல் (பிளானட்டரி ஜியாலஜி)
* அப்ளைடு ஜியாலஜி
* சுரங்க நிலவியல் (மைனிங் ஜியாலஜி)
* பெட்ரோலியம் நிலவியல்
* இன்ஜினியரிங் நிலவியல்
* ஹைட்ராலஜி
படிப்புகள்
இத்துறையில் இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகள் உள்ளன.
பி.எஸ்சி., ஜியாலஜி
எம்.எஸ்சி.,ஜியாலஜி
எம்.எஸ்சி., அப்ளைடு ஜியாலஜி
எம்.டெக்.,ஜியாலஜி
எம்.பில்.,ஜியாலஜி
பயிலும் நிறுவனங்கள்:
டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி
சென்னை பல்கலைக்கழகம், சென்னை
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி
பிரெசிடென்சி கல்லூரி, சென்னை
அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்
ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
வேலைவாய்ப்புகள்
நிலவியல் வல்லுனர்களின் சம்பளம் அனுபவத்தையும், பதவியையும் பொறுத்து ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை அமையும். இத்துறை பயின்றவர்கள் யு.பி.எஸ்.சி.,தேர்வின் மூலம் மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா போன்ற அரசு நிறுவனங்களில் பணியில் அமரலாம். மேலும் நிலக்கரி சுரங்கம், இந்துஸ்தான் சிங்க், ஓ.என்.ஜி.சி.,, மினரல் எக்ஸ்புளோரேஷன் அதாரிட்டி போன்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.

No comments:

Post a Comment