ஏர் ஹோஸ்டஸ் படிப்பை பயில்வதன் மூலம் உலகம் முழுவதும் பறக்க வாய்ப்பு கிடைக்கும். நல்ல மதிப்பு, அதிக வருமானம் தரும் படிப்பாகவும் இது இருக்கிறது. இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
* பிரான்க்பின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏர் ஹோஸ்டஸ் டிரெய்னிங் இந்நிறுவனம் 12 மற்றும் 18 மாத ஏர் ஹோஸ்டஸ் மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் குறித்த டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளை வழங்குகிறது.
கல்வித் தகுதி: டிப்ளமோ படிப்பிற்கு பிளஸ் டூ தேர்ச்சி, முதுநிலை டிப்ளமோவிற்கு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியும் அவசியம். விவரங்களுக்கு www.frankfinn.com * ஏர் ஹோஸ்டஸ் டிரெய்னிங் சென்டர், டில்லி ஒரு வருட மற்றும் 6 மாத சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் கேபின் ஊழியர் பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பிற தகுதிகள்: ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் மற்றும் சிறந்த தோற்றம் அவசியம்.விவரங்களுக்கு: www.ahtc.co.in/adm.htm * ஏவியேஷன் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி அகடமி இந்தியா முழுவதும் உள்ள இந்நிறுவனம், ஒரு ஆண்டு ஏவியேஷன் மற்றும் விருந்தோம்பல் படிப்புகளை வழங்குகிறது.
கல்வித் தகுதி: பிளஸ் டூ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விவரங்களுக்கு: www.airhostessacademy.com* ஐ.ஐ.எப்.எல்.ஒய்., , மும்பை இந்நிறுவனம் 10 மாத ஏர் ஹோஸ்டஸ் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
கல்வி தகுதி: பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விவரங்களுக்கு: iifly.in * பேம், புதுடில்லி இந்நிறுவனம் 3 ஆண்டு படிப்பான பிஎஸ்.சி., ஏர்லைன் டிக்கெட்டிங் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்புகளை வழங்குகிறது.
கல்வித் தகுதி: பிளஸ் டூ. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விவரங்களுக்கு: www.fame.edu.in
No comments:
Post a Comment