பின்னர் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூருக்கு மாற்றப்பட்டது. இங்கு முதன்முதலாக பி.இ., (பயர்) பாடப்பிரிவு 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உள்ள பயர் இன்ஜினியரிங் பாடப்பிரிவு மிகவும் பிரசித்தி பெற்றது. தேவையற்ற தீ விபத்துக்களிலிருந்து கட்டடங்களையும் வாழ்வாதாரங்களையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் கலையம்சம் கொண்ட விஞ்ஞானப் பிரிவே பயர் இன்ஜினியரிங் எனப்படுகிறது.
மனித உயிர்களையும் உடமைகளையும் காக்கும் பணியாக இருப்பதால் இத்துறை மகத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது. பயர் இன்ஜினியரிங் துறையில் அபாயகரமான சவால்கள் அதிகம் உள்ளன. தவிர பொதுச் சேவையில் தவறாத ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற முடியும். தீ விபத்துக்களைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பை வழங்குவதே இத் துறையின் தலையாய பணியாக இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டுவிடும் சமயத்தில் விபத்தினால் ஏற்படும் இழப்பை முடிந்த அளவு குறைப்பவர்களும் இத் துறையினர் தான். தீ விபத்துக்களைத் தடுக்கும் உபகரணங்களில் தேவைக் கேற்ற மாறுதல்களைக் கொண்டு வருபவர்களும் இவர்கள் தான்.
பாடப்பிரிவுகள்
பயர் இன்ஜினியரிங்கில் பி.இ., (பயர்) மூன்றரை ஆண்டு பாடப்பிரிவு, சான்றிதழ் படிப்பு என பல்நிலைப் படிப்புகள் இக்கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன.
பி.இ.,(பயர்),
சப் ஆபிசர்ஸ் கோர்ஸ்,
டிவிஷனல் ஆபிசர்ஸ் கோர்ஸ்,
பயர் பிரிவென்சன் கோர்ஸ்,
ஸ்டேஷன் ஆபிசர்ஸ் அண்டு இன்ஸ்டிரக்டர் கோர்ஸ்,
பிரீத்திங் அப்ராடஸ் போன்ற சான்றிதழ் படிப்புகளும் இக்கல்லூரியில் கற்றுத்தர படுகின்றன.
பி.இ., பயர் இன்ஜினியரிங்கில் சேர்வதற்கான தகுதிகள்
பி.இ., பயர் இன்ஜினியரிங் படிக்க பி.எஸ்சி., வேதியியல் பட்டப் படிப்பை இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும். பொதுவாக இது மூன்றரை ஆண்டு காலப் படிப்பாகும். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் படிப்பு முடித்தவர்கள் பயர் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். பிளஸ் 2வில் வேதியியல், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் இத் துறையின் சான்றிதழ் படிப்பில் சேரலாம்.
உடற்தகுதி
இத்துறைக்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுவது நல்ல உடற்தகுதி தான். மேலும் குறைந்த பட்ச உயரமாக 160 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு 81 செ.மீ., இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ., விரிவடைவதாகவும் இருக்க வேண்டும். கண்ணாடி அணியாதவராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணி வாய்ப்புகள் உள்ள இடங்கள்
பயர் இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களின் தீயணைப்புப் பிரிவுகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் கல்வி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் பயர் இன்ஜினியரிங் படித்திருப்பவருக்கான வாய்ப்புகள் உள்ளன. மாபெரும் உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலியக் கிணறுகள், டெக்ஸ்டைல் துறை, இயற்கை விவசாயத் துறை, வேதிப் பொருள் தயாரிப்பகங்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விமானத் துறை, எரிபொருள் தொடர்பான உற்பத்தித் துறை போன்றவற்றிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இந்தியாவில் பயர் இன்ஜினியரிங் சம்பந்தமாக அரசு நடத்தும் ஒரே கல்வி நிறுவனம் இந்த நேஷனல் பயர் சர்வீஸ் காலேஜ். மனித உயிர்களை பாது காக்கும் சமூக சேவையாக இத்துறை இருக்கிறது. இதனால் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இளைஞர் களிடையே போட்டியும் காணப்படுகிறது. மேலும் இக்கல்லூரியை பற்றிய விவரங்களை
No comments:
Post a Comment