உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.
சில கல்வி நிறுவனங்கள், ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்விக் கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.
கல்விக் கடன் பெறும் மாணவர், வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.
வட்டி விகிதம்
மாணவர்கள் பெறும் கல்விக் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் குறைந்த பட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகிதக் கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன.
கடன் ஜாமீன்
கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையைப் பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றிற்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.
கடனை திருப்பி அளித்தல்
கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. அதுவும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்
மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)
கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்.
மனித வாழ்வில் வழிகாட்டுதல் என்பது முக்கிய அம்சம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ரிசர்வ் வங்கி, கடன் வழங்குவது குறித்து வழிகாட்டியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதிச் சீட்டுடன், வீட்டுக்கு அருகில் உள்ள வங்கியை அணுக வேண்டும். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் கல்விக்கடன் பெறலாம். எல்லா படிப்புகளுக்கும் கடன் கிடைக்கிறது. ஆனால் தேர்ந்தெடுத்த படிப்பு, அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்றவையா என முதலில் பார்க்க வேண்டும். கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லையென்றாலும், பாடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றாலும் கடன் கிடைக்காது.
உள்நாட்டில் படிக்கும் படிப்புக்கு நான்கு லட்ச ரூபாய் கடன் வரை, எவ்வித பிணையமும் தேவையில்லை. மொத்த செலவையும் கடனாக பெறலாம். அதற்கு மேல் தேவையெனில் ஐந்து சதவீதத் தொகையை பெற்றோர் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்கு 15 சதவீத கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டும். முதலாண்டில் அவசரமாக கட்டணம் செலுத்திய பின், கடனுக்கு விண்ணப்பித்தால், அந்தத்தொகை வங்கியிலிருந்து கடனாக பெற்றோருக்கு வழங்கப்படும். படித்து முடித்த ஓராண்டு அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்தில் இருந்து கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்கி படிப்பதால் நன்கு படித்து, நல்ல வேலை கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்
-------------------------------------------------------------------------------------------------------
எஸ்.சி. பிரிவு மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., பயோ டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், கல்வி, சட்டம், நர்சிங், இதழியல், பிஎச்.டி., சி.ஏ. அல்லது ஐசிடபிள்யுஏ போன்ற படிப்புகளை படிக்கும் எஸ்.சி., மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4
மேலும் விவரங்களுக்கு
--------------------------------------------------------------------------------------------------------
துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தொழிற்கல்வி / தொழில்நுட்ப கல்வியை பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு அளவில் படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல், நிர்வாகம், சட்டம், தொழில்நுட்பக் கல்வி, பிசியோதெரபி, நர்சிங் முதலியனவற்றில் பட்டப்படிப்போ அல்லது பட்ட மேற்படிப்போ, டிப்ளமோ படிக்கும் பிள்ளைகளுக்கு நேஷனல் சபாயி கர்மசாரிஸ் பினான்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் கடன் உதவி அளிக்கிறது.
தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.nskfdc.nic.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------
பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு http://www.nbcfdc.org.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.
---------------------------------------------------------------------------------------------------------
உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.nhfdc.nic.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.
----------------------------------------------------------------------------------------------------------
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி சிலருக்கு கல்விக் கடன் மறுக்கப்படுகிறது.
அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்து, வேறு வங்கியிலும் மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒவ்வொரு விதமான நடைமுறைகளைப் பின்பற்றும். வங்கிகள் கோரும் சான்றுகளும் கூடு வேறுபடும். எனவே, ஒரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் முன், அதன் நடைமுறையை சரியாக படித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கல்விக் கடன் நடைமுறைகள் முடிய 2 வாரங்கள் முதல் ஒரு மாதமும் அதற்கு மேலும் கூட ஆகலாம். அதேப்போல, வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்தை முதலில் கேட்டு, எங்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதோ அங்கு விண்ணப்பிப்பது நல்லது.
பொதுவாக வங்கிகள் தொழிற்கல்வி எனப்படும் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், மேலாண்மை படிப்பு, சார்ட்டட் அக்கவுண்ட் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க ஆர்வம் செலுத்துகின்றன. ஏனெனில், இப்படிப்புகளை முடித்ததும், மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து, கடன் திருப்பி செலுத்தப்படும் என்பதுதான்.
இதே ஒரு கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பணி உறுதி குறைவு என்பதால் அவர்களுக்கு கல்விக் கடன் வழங்க நிறைய நடைமுறைகளைப் பின்பற்றுகிறது வங்கிகள்.
இந்தியாவில் தற்போது 20க்கும் மேற்பட்ட வங்கிகள், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குகிறது. ஆனால், மாணவர்கள் திருப்பி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையை, மாணவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில் வங்கிகள் எதிர்பார்க்கின்றன என்பதும் ஒரு ரகசியமாகும்.
அதாவது, எதற்காக கடன் கேட்கிறோம் என்று மாணவர்கள் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். ஒரு மாணவர், எங்கள் தந்தை செய்து வந்த தொழில் தற்போது நலிந்துவிட்டது. கையில் காசில்லாததால் படிக்க கடன் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நம்பிக்கை இங்கு குறைகிறது. வீட்டில் மாத வருமானமே நிரந்தரமில்லாத நிலையை இந்த வாக்குமூலம் உணர்த்துகிறது.
இதுவே, உயர் கல்வி பயில கடன் அளித்தால், அதைக் கொண்டு படித்து முடித்து அந்த கடனை அடைப்பேன் என்று ஒரு மாணவர் குறிப்பிட்டிருந்தால் அவருக்கு கடன் அளிக்க வங்கி முன்வருகிறது.
இது மட்டுமல்ல, ஜாமீன் போடுபவரின் கணக்கு விவரம் சரியில்லாமல் இருத்தல், மாணவரது மதிப்பெண், தேவையான சான்றுகளை சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள், அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையம் அல்லது பாடப்பிரிவில் சேர்நதிருப்பது, குடும்ப மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பது போன்றவையும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட காரணங்களாகும்.
சரியான கல்வித் தரம் இல்லாத கல்வி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது. அந்த கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள், உயர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனுடன் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் என்பதே காரணமாகும்.
ஆனால், எந்த விதமான காரணமும் இன்றி, ஒரு மாணவருக்கு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அவர் வங்கியின் மேலதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துவிட்டு, வேறொரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்து கடன் பெறலாம் என்பதே கல்வி ஆலோசகர்களின் கருத்தாகும்.
ஒரு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டதும் துவண்டு விடாமல், விண்ணப்பிக்கும் போது செய்த தவறுகளை திருத்திக் கொண்டு உடனடியாக வேறு வங்கியில் கடன் உதவி பெற முயற்சிப்பதே மாணவர்களின் புத்திசாலித்தனமாகும்.
மேலும், அரசு வங்கியாக இருப்பின், கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணத்தை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனால், தனியார் வங்கியாக இருந்தால் காரணத்தை அறிந்து கொள்ள இயலாது.
வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள்
No comments:
Post a Comment