About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Saturday, 20 December 2014

unknown benefits of Keerai Leaf/veggie - 5

குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

* தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,

* வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,

* சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.

* அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

* அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

* நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

* இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்
-----------------------------------------------------
பொடுதலை

கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில்
இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்

அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவரு

பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்

வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து

(அகத்தியர் குணபாடம்)

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில்

எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில்

மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல

வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று

போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன்

பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல்

குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது.

பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்

விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக

குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும்.

இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும்.

பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின்

கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து

புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை

என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று

உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும்

ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி

செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு

வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு

வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால்

பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து

ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி

அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை

நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம்

உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான

பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.

இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை

வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள

பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு

ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையிர் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும், தலையில் தோன்றும் பொடுகும் நீங்கும்
------------------------------------------
புளிச்ச கீரை

புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆந்திர மக்கள் இதனை கோங்குரா என்பர்.

புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.

இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும். இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.

இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்.
---------------------------------------------
கல்யாண முருங்கை இலை

1. கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.

3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.

4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.

6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.

7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

8. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும்.

9. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்
---------------------------------------------------
புளியாரைக் கீரை

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
3. புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
4. புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
5. புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும்.
6. புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதில் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.
7. புளியாரைக் கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
8. புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணம¡கும்.
9. புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.
10. புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
--------------------------------------------------
சக்கரவர்த்திக் கீரை

கீரையாகப் பயன்படுத்தப்படும் செடிகளுள் சக்கரவர்த்திக் கீரையும் ஒன்று. இந்த கீரைக்குக் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. மலேசியாவில் இதனை kangkong என்று அழைப்பார்கள்.

இது விளை நிலங்களையொட்டி தானாக வளரக்கூடியது. தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.

சக்கரவர்த்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பருப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம்.

இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம்.

சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது. கிராணி எனப்படும் வயிற்றுப் பே¡க்கு நோய்க்கு இந்தக் கீரை சிறந்த மருந்தாகும். சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர் இந்தக் கீரையைப் பயன்படுத்தி குணம் பெறலாம். இது மலத்தை இளக்கும்.

சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.

இக்கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது
---------------------------------------------
கறிவேப்பிலை

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

No comments:

Post a Comment