ஆயுளைக் கூட்டும் ... ஆரோக்கியத்தைக் காக்கும்... மரச்செக்கு எண்ணெய்!
கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்
*மரச்செக்கில் எண்ணெய் சூடேறாது.
*இந்தப் பிண்ணாக்குக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
*இந்தச் செக்கில் இருக்கிற உரல், உலக்கை இரண்டுமே மரத்தால் ஆனது.
'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்யமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரிகம் என நினைக்கிறோம். அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும் எண்ணெய்.

மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. மரச் செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், அது எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைகிறார்கள். குறிப்பாக, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள், தாங்கள் உற்பத்திசெய்த எள், நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றை ஆட்டுவதற்கு மரச்செக்கைத் தேடி அலைகிறார்கள்.
மரச்செக்கை மறக்கடித்த ரோட்டரி!
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவிரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது, ஒரு மரச்செக்கு. ஓடுகள் வேயப்பட்ட ஒரு சின்னஞ்சிறு அறையில் மிகவும் எளிமையாக இயங்குகிறது, அந்த மரச்செக்கு. இப்பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பழனிராஜன் இருவரும் சேர்ந்து இதனை நடத்தி வருகிறார்கள். மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கிய சரவணன்,
‘‘இந்தத் தெருவுக்கு ‘செக்கடி’ தெருனு பேரு. 35 வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தெருவுல மட்டுமே 30-க்கும் மேல, மரச்செக்குகள் இருந்துச்சு. வீட்டுக்குப் பின்னாடி கொல்லையில மாடுகள் பூட்டி செக்குகள் இயங்குச்சு. எங்க குடும்பத்தோட பரம்பரைத் தொழிலும் செக்குதான். காலப்போக்குல ரோட்டரி, நவீன எண்ணெய் ஆலைகள் வந்ததும் மரச்செக்குத் தொழில் வீழ்ச்சி அடைய ஆரம்பிச்சுது. அவங்க ரோட்டரியோட உற்பத்தித் திறன் அதிகம். அதனால, குறைஞ்ச விலையில எண்ணெயை விற்பனை செஞ்சாங்க. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களோட வரத்துக்குப் பிறகு, மரச்செக்கு எண்ணெயை மக்கள் மறக்க ஆரம்பிச்சாங்க. அதனால, இந்தத் தொழில்ல இருந்தவங்க வேறு தொழிலுக்கு மாறிட்டாங்க. இதனால மரச்செக்குகளைப் பார்க்கிறது அரிதாகிடுச்சு’’ என்றார் வேதனையாக.

மரச்செக்குல எண்ணெய் பிழிவது மிகப்பெரிய கலை!
அவரைத் தொடர்ந்து பேசிய பழனிராஜன், ‘‘ஏற்கெனவே மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்தி, அதோட அருமை தெரிஞ்சவங்க எல்லாம் ‘மரச்செக்கு எண்ணெய் மறுபடியும் எங்கயாவது கிடைச்சா நல்லா இருக்கும்’னு ஆதங்கப்பட்டதைப் பார்த்துதான், லாபத்தைப் பெருசா எதிர்பார்க்காம, இதை ஆரம்பிச்சோம். நம்மாழ்வார் அய்யாவும், பசுமை விகடனும் எங்களுக்குள்ள ஏற்படுத்துன தாக்கமும் இதுக்கு முக்கிய காரணம். பல வருஷத்துக்குப் பிறகு நம்ம குடும்பத் தொழிலை மறுபடியும் கையில எடுக்கிறோம்ங்கறதுல கூடுதல் சந்தோஷம்’’ என்றபடியே ஓடிக்கொண்டிருந்த செக்கில் இருந்து எண்ணெயை கையில் அள்ளி, நம் கைகளில் ஊற்றினார்.
சூடேறாத எண்ணெய்!
‘‘முன்ன மாடுகளா வெச்சு செக்கு ஓட்டினாங்க. இப்ப மோட்டார் வெச்சு ஓட்டுறோம். ஆனாலும், மாடுகள வெச்சு ஓட்டுற அதே சுவையில எண்ணெய் கிடைக்குது. இதோ, இந்த எண்ணெய் கொஞ்சம் கூட சூடேறவே இல்லை பாருங்க. ரோட்டரியில பிழியுற எண்ணெயில, இதுமாதிரி கை வைக்க முடியாது. சூடு பறக்கும். எண்ணெயை ஒரு தடவை சூடுப்படுத்திட்டு, மறுபடியும் அதை பயன்படுத்துனா உடலுக்குத் தீங்காகிடும். ரோட்டரியில, எள்ளுல இருந்து நல்லெண்ணெயைப் பிரிச்சி எடுக்க, மொலாசஸ் சேர்க்கிறாங்க. எண்ணெயைச் சுத்திகரிக்க, ரசாயனங்களைப் பயன்படுத்துறாங்க. எண்ணெயில இருக்கிற எல்லா சத்துக்களையும் பிரிச்சு எடுத்துடுறாங்க. மரச்செக்குல, எள்ளுல இருந்து எண்ணெய் பிரிச்செடுக்க, வெல்லம் இல்லைனா கருப்பட்டிதான் சேர்ப்போம். மொலாசஸ் ஒரு கிலோ 15 ரூபாய்தான் ஆனா, வெல்லம் கிலோ 44 ரூபாய். கருப்பட்டி 219 ரூபாய். லாபம் குறைச்சலா இருந்தாலும் பரவாயில்லைனுதான் நாங்க இதைப் பயன்படுத்துறோம்’’ என்றவர், பெரிய பெரிய கட்டிகளாக இருந்த எள்ளுப் பிண்ணாக்கை கைகளில் எடுத்து,
‘‘இதுல எண்ணெய்ச்சத்து நிறைய இருக்கிறதுனாலதான், பெரிய கட்டிகளா, வாசனையா, சுவையா இருக்கு. மாடுகளும் இதை விரும்பி சாப்பிடுது. நல்லா ஊட்டமும் கிடைக்குது. இந்தப் புண்ணாக்குக்கு விவசாயிககிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. ஆனா, ரோட்டரி புண்ணாக்கு சின்னச்சின்ன துண்டுகளா, வெறும் சக்கையாக இருக்கும்’’ என்றவர், எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாசனைக்காக எலுமிச்சை!
‘‘எட்டு மணிநேரத்துல 80 கிலோ எள்ளு ஆட்டலாம். இதோட, எட்டு கிலோ வெல்லம் இல்லைனா கருப்பட்டி சேர்த்து ஆட்டுவோம். 32 லிட்டர் நல்லெண்ணெயும், 47 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். வெல்லம் கலந்து ஆட்டுன நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 220 ரூபாய். கருப்பட்டி கலந்து ஆட்டுனா 270 ரூபாய்னு இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்றோம். புண்ணாக்கை ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்னு விற்பனை செய்றோம். இங்கயே வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க.
கொப்பரைத் தேங்காய் ஆட்டுறதா இருந்தா, 8 மணிநேரத்துல 120 கிலோ ஆட்டலாம். அதோட 4 கிலோ வெல்லம், எட்டு எலுமிச்சம் பழம் போடுவோம். சீக்கிரத்துல கெட்டுப்போகாம இருக்கவும், வாசனைக்காகவும் எலுமிச்சம்ப்பழம் சேர்க்கிறோம். 48 லிட்டர் தேங்காய் எண்ணெய், 71 கிலோ தேங்காய்ப் புண்ணாக்கு கிடைக்கும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 160 ரூபாய், ஒரு கிலோ தேங்காய்ப் புண்ணாக்கு 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். மாடுகள் தேங்காய்ப் புண்ணாக்கு சாப்பிடாது. மீன்கள் இதை விரும்பி சாப்பிடுறதுனால, மீன் பண்ணைகள்ல இதை வாங்கிக்கிட்டு போறாங்க.
கடலை ஆட்டுறதா இருந்தா, 8 மணி நேரத்தில 100 கிலோ ஆட்டலாம். 40 லிட்டர் எண்ணெய், 59 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெய் 180 ரூபாய். புண்ணாக்கு 65 ரூபாய்னு விற்பனை செய்றோம்.
கிலோவுக்கு 22 ரூபாய்!
இயற்கை விவசாயத்துல விளையுற எள்ளு, கடலை, தேங்காயைமட்டும்தான் இங்க பயன்படுத்துறோம். ஒரு மாசத்துக்கு 600 முதல் 700 லிட்டர் எண்ணெய் விற்பனை செய்றோம். எங்களோட உற்பத்தி மட்டுமில்லாம, வெளியில இருந்து விவசாயிகள் கொண்டு வர்றதையும், ஆட்டிக் கொடுக்கிறோம். ஒரு கிலோவுக்கு 22 ரூபாய் கூலி வாங்குறோம். இந்த மரச்செக்கு மூலமா எங்களுக்கு மாசத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. கூடுதலா இன்னொரு மரச்செக்கும் இங்க போடலாம்னு இருக்கோம். அதோட நாங்களே நேரடியா இயற்கை விவசாயம் செய்யலாம்ங்கிற எண்ணமும் இருக்கு’’ என்றார்.

தொடர்புக்கு,
சரவணன்,
செல்போன்: 94437-98430,
பழனிராஜன்,
செல்போன்: 72009-51433
சரவணன்,
செல்போன்: 94437-98430,
பழனிராஜன்,
செல்போன்: 72009-51433
ரோட்டரி, மரச்செக்கு என்ன வித்தியாசம்?
மரச்செக்குக்கும், ரோட்டரிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து பேசிய செக்கு ஓட்டுநர் சேகர், ‘‘இந்த மரச் செக்கு 1.5 குதிரைத் திறனுள்ள மோட்டார் மூலமா ஓடுது. எட்டு மணிநேரம் இயக்க, சுமார் எட்டு யூனிட் கரன்ட் செலவாகும். இந்த செக்குல இருக்கிற உலக்கை, உரல் ரெண்டுமே மரத்தால ஆனது. உலக்கை, வம்மரை மரத்திலும், உரல், வாகை மரத்திலும் செஞ்சிருக்காங்க.
உலக்கையோட எடை 40 கிலோ. உலக்கையும் உரலும் ஒரு நிமிஷத்துல ஒன்பதரை சுத்து சுத்தும். இதனாலதான் மரச்செக்குல ஆட்டுற எண்ணெய் சூடாகாம இருக்கு. ஆனா, ரோட்டரியில உலக்கை, உரல் ரெண்டுமே இரும்புல இருக்கும். உலக்கையோட எடை 80 கிலோ. ஒரு நிமிஷத்துக்கு 38 சுத்து சுத்தும். அதோட உற்பத்தித் திறன் மரச் செக்கை விட, நாலு மடங்கு அதிகம். 10 குதிரைத் திறன் மின்மோட்டார்ல அது இயங்குது’’ என்றார்.

No comments:
Post a Comment