ஆரோக்கியமான உடலுக்கு நெல்லிக்காய் சாப்பிடுங்க..
அனைவருக்குமே நெல்லிக்கனியைப் பற்றி நன்கு தெரியும். இந்த நெல்லிக்கனி நிறைய உணவுப் பொருட்களில் பயன்படுகிறது. அதாவது ஸ்வீட்ஸ், ஜாம், பவுடர், ஊறுகாய், சில சமயங்களில் அப்படியே சாப்பிட என்றெல்லாம் பயன்படுகிறது. ஆனால் இந்த நெல்லிக்காய் உடலுக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்காயில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்போது இந்த நெல்லிக்காயை சாப்பிட்டால், எதற்கெல்லாம் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!
நெல்லிக்காயின் நன்மைகள்:
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
* உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
* இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
* செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.
* உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
* கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.
* இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
* நெல்லிக்காய் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
நெல்லிக்காயை தவிர வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்:
* அனைத்து விதமான பச்சைக் காய்கறிகள், கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
* குடைமிளகாயின் வகைகள் அனைத்திலுமே வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
* பழங்களில் மாம்பழம், அன்னாசி பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி பழங்கள் மற்றும் பப்பாளியில் அடங்கியுள்ளன.
* காய்கறிகளில் காலிஃப்ளவர், பிராக்கோலி, சிவப்பு முட்டைகோஸ் போன்றவற்றில் உள்ளன.
* மூலிகைகளில் பேசில், புதினா, கொத்தமல்லி, ரோஸ்மேரி போன்ற அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளன.
ஆகவே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நெல்லிக்காயுடன், மேற்கூறிய சில உணவுப் பொருட்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment