யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம்.
பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.
மாரடைப்பை தடுக்கும்
தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
நறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது.
உடல் பருமன் குறையும்
அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!
நாம் உண்ணும் உணவும், நமது எண்ணமும்தான் நம்மைத் தாக்கும் நோய்களுக்கு அடிப்படை காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். நாம் எதை சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் உணவு மருந்தாக செயல்படுகிறது. இன்றைய உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவை பெரும்பான்மையாரை தாக்குகின்றன. எனவே சரியான உணவு உட்கொள்வதன் மூலம் நோயை தீர்க்கலாம். ஏனெனில் உணவும், மருந்தும் இணைந்துதான் நோயைக் குணமாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சைவ உணவு
இதய நோயாளிகள் தினசரித 1500 கலோரிகள் வரை உணவு எடுத்துக்கொள்ளலாம். உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு அதாவது 15 கிராம் வரை கொழுப்பு உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சைவ உணவு உட்கொள்பவர்கள் அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது தேநீர் ஒரு கப் அருந்தலாம்.
காலை உணவாக இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி எடுத்துக்கொள்ளவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பசிக்கும் போது மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ் அருந்தலாம். மதிய நேரத்தில் சாதம், சாம்பார் அல்லது பருப்புடன் இரண்டு வகை காய்கறிகள் சாப்பிடலாம். தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம் இவற்றை சாப்பிடுவது நல்லது.
மாலை நேரத்தில் அதிக நீர் கலந்த தேநீர் அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு சாப்பிடவேண்டும். இரவு நேரத்தில் எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர் சாப்பிடலாம். படுக்கச் செல்லுமுன் ஆடை எடுக்கப்பட்ட பால் அருந்துவது நல்லது.
அசைவ உணவு
அசைவ உணவு உண்பவர்கள் காலை நேரத்தில் ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து உண்ணலாம். கொள்ளலாம்.
இடைப்பட்ட நேரத்தில் கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.
மதிய நேரத்தில் சாதத்துடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு நேரத்தில் எண்ணெய் விடாத இரண்டு சப்பாத்தி அதனுடன் ஒரு கிண்ணம் சிக்கன் குருமா மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். `விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்' என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பு மிகவும் சத்து நிறைந்த உணவுபொருளாகும். வறட்சி காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு மருத்துவ குணம் கொண்டது. இதயநோயை கட்டுப்படுத்துவதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கம்பில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.
உடல் சூடு தணிக்கும்
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் காலை வேளையில் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவோடு சேர்த்து உண்டால் குடல்புண், வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய
உடல் வலுவடைய கம்பு மிகச்சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவைடையும். இது கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கும். சிறுநீரை பெருக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி குடித்தால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

No comments:
Post a Comment