டயட் டூர் - வயிறு நிரம்பும் வரை!
ந.ஆசிபா பாத்திமா பாவா
பேலியோ டயட்டில் மாவுச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடக் கூடாது, பழங்கள் சாப்பிடக் கூடாது என்கிறீர்களே... அப்படியானால், என்னதான் சாப்பிட முடியும் என்கிற கேள்விக்கு முழு நீள உணவுப்பட்டியலே அளிக்கிறார் டாக்டர் மரியானோ ஆன்டோ ப்ரூனோ மஸ்கரணாஸ்.
என்னென்ன சாப்பிடலாம்?
* மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
* பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ்
* மஞ்சள் கருவுடன் முட்டை
* கொழுப்புடன் கூடிய இறைச்சி
* கடல் உணவுகள்
* பால், நெய், வெண்ணெய், சீஸ், பனீர், தயிர், மோர் போன்ற அனைத்துப் பால் பொருள்கள்
* தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டியது என்றால் மிகவும் நல்லது)
* அனைத்துவகை கீரைகள்
எவ்வளவு சாப்பிடலாம்?
* இந்த உணவுகளை இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற குறிப்பிட்ட அளவு ஏதும் கிடையாது. வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி அடங்கியபின் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இது மிகவும் முக்கியம்.
* முழு முட்டை, இறைச்சிகளில் கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சியே நல்லது.
* கொழுப்புச்சத்து குறைவான கருவாடு, சிக்கன் போன்றவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பேலியோவில் கொழுப்பே நம் உடலுக்குத் தேவையான எரிபொருள். மாவுச்சத்து உள்ள உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்பதால், கொழுப்பு மட்டுமே நமக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. அதனால், அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சாப்பிடுவதால் என்ன ஆகும்?
இப்படி நாம் நேரடியாகச் சாப்பிடும் கொழுப்பு, கொழுப்பாகச் சேராமல் அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக மாறி, எரிக்கப்பட்டுவிடுகிறது. இதன்மூலம், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புக் கரைக்கப்பட்டு, உடல் எடைக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுதான் ‘பேலியோ டயட்’டின் அடிப்படைக் கொள்கை.
சரி... ‘பேலியோ டயட்’ தொடங்கப்போறீங்களா? கொஞ்சம் பொறுங்கள். முதலில் சில பரிசோதனைகளை நீங்கள் செய்ய வேண்டும்.